செல்பி எடுக்க மறுத்ததால் விமான நிறுவன பணிப்பெண் மீது தாக்குதல்

0 1262

விமானப் பணிப்பெண் செல்ஃபிக்கு போஸ் தர மறுத்தால் குடிபோதையில் அப்பெண்ணை உதைத்து கீழே தள்ளி தாக்கியவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வியட்னாமின் தன் ஹோவா ((Tahn hoa))-வில் உள்ள தோ சுவான் ((Tho Xuan)) விமான நிலையத்தில் வியட்ஜெட் ஏர் நிறுவனப் பணிப்பெண்ணாக உள்ளவர் லெ தி ஜியாங் ((Le Thi Giang)). இவரை அணுகிய மூன்று பயணிகள் தன்னுடன் செல்ஃபி எடுக்க வேண்டும் எனக் கோரினர். சரி என சம்மதித்து படம் எடுத்த சிறிது நேரத்தில் மீண்டும் வந்து மற்றொரு செல்ஃபி எடுக்க வேண்டும் என கோரினர். தான் தற்போது பணியில் இருப்பதாக அப்பெண் மரியாதையுடன் பதிலளித்து மறுத்த நிலையிலும், அவரை உதைத்து கீழே தள்ளி வசைபாடியதோடு கடுமையாகத் தாக்கினர்.


இச்சம்பவத்தை அடுத்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மூவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு முறையே மூன்று ஆண்டுகள், 2 ஆண்டுகள் 10 மாதம், 1 ஆண்டு 10 மாதம் என சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments