இறந்த யானைகளின் இறைச்சியை உண்ட 500 கழுகுகள் உயிரிழப்பு

0 520

ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவில் விஷம் தடவிய உணவைச் சாப்பிட்ட 500க்கும் மேற்பட்ட கழுகுகள் உயிரிழந்தன.

அங்குள்ள வனப்பகுதிக்கு வேட்டையாட வந்தவர்கள் யானைத் தந்தங்களை அறுத்து எடுத்துச் சென்ற பின்னர், யானைகளின் உடல் மீது நஞ்சினைத் தடவிச் சென்றனர். இந்நிலையில் இறந்த சடலங்களை உண்டு வாழும் ஆப்பிரிக்கக் கழுகுகள் யானைகளின் இறைச்சியை உணவாக உட்கொண்டன.

அடுத்த சில நிமிடங்களில் 500க்கும் மேற்பட்ட கழுகுகள் பறந்து கொண்டிருந்த போதே ஆங்காங்கே விழுந்து உயிரிழந்தன. இந்தக் கழுகுகளில் 300க்கும் மேற்பட்ட அழிந்து வரும் நிலையில் உள்ளன என்பது பரிதாபத்தின் உச்சகட்டம். இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக போட்ஸ்வானா அரசு தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments