அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தின் பெயர் ‘பிகில்’

0 1349

நடிகர் விஜய்யின் பிறந்தநாளையொட்டி, அவர் நடிக்கும் பிகில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், 2வது லுக் போஸ்டர்கள் வெளியாகி உள்ளன.

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் 63வது படத்துக்கு ‘பிகில்’ என பெயரிடப்பட்டுள்ளது. ‘தெறி’, ‘மெர்சல்’ படத்துக்கு பின் மூன்றாவது முறையாக ஒன்று சேர்ந்திருக்கும் இயக்குனர் அட்லீ மற்றும் நடிகர் விஜய் ஆகியோரின் படத்தை, ஏஜிஎஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் உருவாக்கி வருகிறது. இந்த படத்துக்கான 80 சதவீத படபிடிப்பு முடிந்துள்ள நிலையில், இறுதிகட்ட படபிடிப்பு நடந்து வருகிறது.

தற்காலிகமாக படத்துக்கு ‘தளபதி 63’ என படக்குழு பெயரிட்டிருந்த நிலையில், படத்துக்கு ‘பிகில்’ என பெயரிட்டு, அதன் ‘பர்ஸ்ட் லுக்கை’ படக்குழு வெளியிடப்பட்டுள்ளது. விஜயின் பிறந்த நாளை இன்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ட்விட்டர் மூலம் ஏராளமானோர் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். இந்நிலையில்,நள்ளிரவில், பிகில் படத்தின் 2வது லுக் வெளியிடப்பட்டது. ட்விட்டரில் இந்தப் படம் அகில இந்திய அளவில் டிரெண்டிங்கில் முதலிடத்தில் இருந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments