டிப்பர் லாரி ஏறி இறங்கியதில் சிறுமி உட்பட 2 பேர் பலி

0 1063

விழுப்புரம் அருகே, டிப்பர் லாரி மோதி சிறுமி உட்பட 2 பேர் உயிரிழந்தை கண்டித்து, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

புருஷானூர் கிராமத்தை சேர்ந்த துரைராஜ், தனது உறவினர் நாகம்மாள் மற்றும் 4 வயது மகள் நந்தினி ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில், விழுப்புரம் நோக்கி சென்றார். அவர்கள் சாலை பணி நடந்து வரும் விக்கிரவாண்டி- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை வழியாக பஞ்சமாதேவி என்ற இடம் அருகே சென்றபோது, கல் இடறி வாகனத்துடன் 3 பேரும் சாலையில் விழுந்தனர்.

அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த சாலை பணியில் ஈடுபடுத்தப்பட்ட டிப்பர் லாரி , நாகம்மாள் மற்றும் நந்தினியின் உடல் மீது ஏறி இறங்கியது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தகவல் அறிந்து வந்த பொதுமக்கள் மற்றும் உறவினர்கள், நெடுஞ்சாலைத்துறையினரின் அலட்சிய போக்கை கண்டித்து விக்கிரவாண்டி - கும்பகோணம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

சுமார் ஒரு மணி நேரம் நீடித்த போராட்டத்தை அறிந்து அங்கு விரைந்த வளவனூர் போலீசார், உரிய நடவடிக்கை எடுப்பதாக சமரசம் செய்து போக்குவரத்தை சரிசெய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT