9 நாட்களாக குடும்பத்தோடு மருத்துவமனைக்கு வெளியே படுத்துறங்கும் நோயாளிகள்

0 1115

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற வெளியூர்வாசிகள் மருத்துவரின் நேரம் கிடைக்காததால் குடும்பத்துடன் வெளியில் படுத்துறங்கி வருகின்றனர்.

மேற்கு வங்கத்தில் மருத்துவ மாணவர் தாக்கப்பட்டதை அடுத்து நடந்த போராட்டம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையிலும் எதிரொலித்தது. அப்போது புற நோயாளிகள் சேவை பாதித்தது. மீண்டும் மருத்துவ சேவை வழக்கம்போல் தொடங்கியது.

இதன் பின்பும் மருத்துவமனைக்கு வெளியே குடும்பத்தோடு படுத்துறங்கும் வெளியூர் நோயாளிகளின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகரித்துக் காணப்படுகிறது.

ஒருவர் தாம் 9 நாட்களாக மருத்துவமனைக்கு வெளியே குடும்பத்தோடு படுத்துறங்குவதாகவும், நாளை மறுதினம் தான் மூத்த மருத்துவரைப் பார்க்க நேரம் கிடைத்துள்ளதாகவும் கூறியுள்ளார். அதுவரை, பாதுகாவலர்கள் மருத்துவமனைக்கு அனுமதிப்பதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT