அரசு மருத்துவர்களின் அலைகழிப்பால் பிறந்து 4 நாட்களே ஆன குழந்தை பலி

0 789

உத்தரபிரதேசத்தில் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சிகிச்சை அளிக்காமல் அலைகழித்ததால், பிறந்து 4 நாட்களே ஆன குழந்தை, பரிதாபமாக பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பரேலி நகரில் 4 நாட்களுக்கு முன்னர் பிறந்த பெண் குழந்தை ஒன்றுக்கு, திடீரென மூச்சுக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் குழந்தையின் பெற்றோர், அரசு மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு ஆண்கள் பிரிவில் இருந்த மருத்துவர்கள் குழந்தையை பரிசோதிக்க மறுத்து, பெண்கள் பிரிவுக்கு கொண்டு செல்லுமாறு கூறியுள்ளனர். இதையடுத்து பெண்கள் பிரிவுக்கு கொண்டு சென்ற போது, அங்கும் போதிய படுக்கைகள் இல்லை எனக் கூறி குழந்தையை அனுமதிக்க மறுத்துள்ளனர்.

இதனால் செய்வதறியாது திகைத்த பெற்றோர், சுமார் 3 மணி நேரம் அலைகழிக்கப்பட்ட பின்னர் வீட்டிற்கு செல்ல எத்தணித்துள்ளனர். அப்போது குழந்தை ஊர்வசி பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், குழந்தை பலியானதற்கு காரணமான மருத்துவர்களில் ஒருவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments