நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் இன்று குடியரசுத் தலைவர் உரை

0 536

நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று உரை நிகழ்த்துகிறார். மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டதையடுத்து அவை நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டன.

இந்நிலையில், நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை நிகழ்த்துகிறார்ர். இரண்டாவது முறையாக பதவியேற்ற மோடி அரசின் திட்டங்கள் குறித்து இந்த உரையில் முக்கிய அம்சங்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூலை 5ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், குடியரசுத் தலைவரின் உரை அதன் முக்கிய அம்சங்களை கோடிட்டு காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முத்தலாக் தடுப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய மசோதாக்களும் நாடாளுமன்றத்தில் இந்த வாரம் தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments