மாணவனை இழுத்து கீழே தூக்கி வீசிய கொடூர ஆசிரியர்

0 612

சீனாவில் தொடக்கப் பள்ளி மாணவனை கொடூரமான முறையில் தாக்கிய ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஷான்ஷி மாகாணத்தில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியர் கேட்ட கேள்விக்கு மாணவர்களில் ஒருவர் பதிலளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த ஆசிரியர் குறிப்பிட்ட மாணவனை இருக்கையில் இருந்து இழுத்து கீழே வீசினார்.

தொடர்ந்து அந்த மாணவனை அடித்து இழுத்துச் சென்று மீண்டும் வகுப்பறைக்கு வெளியே வீசினார். ஆசிரியரின் இந்தத் தாக்குதல் அங்கிருந்த சிசிடிவியில் பதிவானது. இதையடுத்து மாணவனின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அந்த ஆசிரியரைக் கைது செய்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments