மொராக்கோவில் இருந்து அகதிகளாக வந்தவர்கள் நடுக்கடலில் தத்தளிப்பு

0 390

மத்திய தரைக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த அகதிகளை ஸ்பெயின் மீட்புப் படையினர் மீட்டுள்ளனர்.

மொராக்கோ நாட்டில் இருந்து ஒரு குழுவினர் அகதிகளாக படகில் பயணித்து வந்துள்ளனர். இவர்கள் வந்த படகு மத்திய தரைக்கடலின் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்ததை அறிந்த ஸ்பெயின் நாட்டு மீட்புப் படையினர் அவ்வழியாக வந்த பயணிகள் கப்பல் மூலம் 27 பேரை பத்திரமாக மீட்டனர்.

ஆனால் தங்களுடன் வந்த 20 பேர் மாயமாகி விட்டதாக அகதிகள் கூறியதைத் தொடர்ந்து, காணாமல் போனவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments