காலம் போன காலத்தில் முன்னணி ஹீரோவுக்கு ஆங்கில முத்தகாட்சி.! கொதிக்கும் ரசிகர்கள்

0 4492

60 வயதிலும் தெலுங்கில் முன்னனி ஹீரோவாக வலம் வரும்  நடிகர் நாகார்ஜூனா, தன் மகன் வயதுடைய நடிகையுடன் ஆங்கில முத்த காட்சியில் நடித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

தெலுங்கு திரை உலகில் பழம்பெரும் நடிகரான அக்கினேனி நாகேஸ்வரராவ்வின் மகன் நாகர்ஜுனா..! 

ஆக் ஷன் ஹீரோவாக அறிமுகமான நாகர்ஜூனா, முதல் மனைவி லட்சுமிக்கு நாகசைதன்யா என்ற மகன் இருந்த நிலையில் 1990ல் அவரை விவாகரத்து செய்து விட்டு, 2 வதாக நடிகை அமலாவை திருமணம் செய்து கொண்டார். அமலாவுக்கு அகில் என்ற மகன் உள்ளார்.

மூத்த மனைவியின் மகன் நாகசைதன்யாவிற்கு 32 வயதாகின்றது. அவர் நடிகை சமந்தாவை திருமணம் செய்து கொண்டுள்ளார். இரண்டாம் தாரமான அமலாவின் மகன் அகிலிற்கு 25 வயதாகின்றது.  நாகர்ஜூனாவின் இருமகன்களுமே தெலுங்கு திரை உலகில் காதல் கதாநாயகர்களாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். ஆனாலும் நாகர்ஜூனா இன்றளவும் ஆக் ஷன் கலந்த மசாலா படங்களில் தொடர்ந்து நடித்து வருகின்றார்.

இந்த நிலையில் 60 வயதை தொட்டுவிட்ட நாகர்ஜூனாவின் நடிப்பில் மன்மதடு படத்தின் 2 வது பாகத்திற்கான டிரைலர் வெளியாகி புதிய சர்ச்சையை உண்டாக்கி உள்ளது.

தனது 2 வது மகன் வயதுடைய நாயகியான அக்ஷ்ரா கவுடா என்ற நடிகையுடன் ஜேம்ஸ்பாண்டு பட பாணியில் முத்தக்காட்சியில் நாகார்ஜூனா நடித்திருப்பது முகம் சுழிக்க வைத்திருப்பதாக கூறி தெலுங்கு ரசிகர்கள் நாகார்ஜூனாவை வார்த்தைகளால் வறுத்தெடுத்து உள்ளனர்.

அக்கினேனி என்ற பாரம்பரியமான குடும்பத்தில் இருந்து கொண்டு எப்படி இது போன்ற மட்டமான காட்சிகளில் 60 வயதுடைய நாகார்ஜூனாவால் நடிக்க முடிகின்றது என்று கேள்வி எழுப்புகின்றனர். இவர் வயதுடைய மற்ற ஹீரோக்கள் எல்லாம் தங்கள் வயத்துக்கேற்ற கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் நிலையில் நாகார்ஜூனா இந்த படத்தில் தன்னை இன்னும் ரோமியாவாகவே நினைத்து இப்படி நடித்திருப்பதாக சினிமா விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில் நாகார்ஜுனாவின் ரசிகர்களோ வயதானாலும் இளமையாக இருக்கும் அவர் இது போன்ற காட்சிகளில் நடிப்பதில் தவறில்லை என்றும் தங்களுக்கு இது போன்ற வாய்ப்பு கிடைக்க வில்லையே என்ற பொறாமையில் இது போன்று அவதூறுகளை சமூக வலைதளங்களில் பரப்புவதாக தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments