பத்திரிக்கையாளர் ஜமால் கசோக்கி கொலையில், சவுதி இளவரசருக்கு தொடர்பு?

0 1148

பத்திரிக்கையாளர் ஜமால் கசோக்கி கொலையில், சவுதி இளவரசருக்கு தொடர்பு இருப்பதாக கூறி, அவர் மீது ஐ.நா சபை விசாரணை நடத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த பத்திரிக்கையாளர் ஜமால் கசோக்கி , கடந்த ஆண்டு, இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி துணை தூதரகத்துக்கு சென்றபோது, கொடூர கொலை செய்யப்பட்டார். இதில் சவுதி அரசுக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், சவுதி அரசு அதனை மறுத்து வந்தது. இந்நிலையில், கசோக்கியின் கொலை குறித்து விசாரணை நடத்தி வந்த ஐ.நா சபையின் சிறப்பு அறிக்கையாளர் ஆக்னஸ் காலாமார்ட், சவுதி அதிகாரிகள் முன்னதாகவே திட்டமிட்டு மிருகத்தனமாக கசோக்கியை கொலை செய்துள்ளதாக தெரிவித்தார்.

இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட 11 பேரிடமும் வெளிப்படை தன்மை மற்றும் நேர்மையான முறையில் விசாரணையில் நடைபெறவில்லை என குறிப்பிட்ட அவர், சவுதி இளவரசர் முகமது பின் சல்மானுக்கும் கசோக்கி கொலையில் தொடர்புள்ளது என்றும், அதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதால், ஐ.நா சபை சர்வதேச விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments