இங்கிலாந்து பிரதமர் யார்? - போட்டாப்போட்டி

0 471

இங்கிலாந்து பிரதமர் தேர்தலில் போரிஸ் ஜான்சன்((Boris Johnson)) 126 வாக்குகளுடன் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார்.

ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறும் பிரக்சிட் முடிவால், இங்கிலாந்தின் பிரதமரான தெரசா மே பதவி விலகினார். இதையடுத்து அடுத்து யார் பிரதமர் என்ற நிலையில், அதற்கான முதல் கட்ட வாக்கெடுப்பில் போரிஸ் ஜான்சன் முன்னிலை பெற்றார். தற்போது இரண்டாவது சுற்றிலும் முன்னிலையில் உள்ளார். பிரதமர் பதவிக்கான போட்டியில், முன்னாள் லண்டன் நகர மேயரும், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான போரிஸ் ஜான்சன் உள்ளிட்ட 10 கன்சர்வேட்டிவ் கட்சி எம்.பிக்கள் போட்டியிட்டனர்.

இதில், கடந்த 13ஆம் தேதி நடைபெற்ற வாக்கெடுப்பில், போரிஸ் ஜான்சன் 114 வாக்குகளையும், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெர்மி ஹண்ட்((Jermey Hunt)) 43 வாக்குகளும் பெற்றனர். அடுத்தச்சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான குறைந்தபட்ச வாக்குகளை பெறாத 3 பேர் வெளியேற்றப்பட, இரண்டாவது சுற்றுக்கான வாக்கெடுப்பில் 7 பேர் பங்கேற்றனர். இதில், கடந்த முறையைவிட, 12 வாக்குகள் கூடுதலாக பெற்ற போரிஸ் ஜான்சன், 125 வாக்குகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

ஜெர்மி ஹண்ட் 46 வாக்குகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். இரண்டு சுற்றுகளின் வாக்கு எண்ணிக்கை முடிவு பெற்றுள்ள நிலையில், அடுத்தபடியாக மூன்றாவது சுற்று எண்ணிக்கை முடிவில் பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments