இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து ஷிகர் தவான் விலகல்

0 9482

உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இருந்து காயம் காரணமாக ஷிகர் தவான் விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக ரிஷப் பந்த் அணியில் இடம் பெறுகிறார். கடந்த 9-ந்தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஆட்டத்தில் தவான் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார்.

போட்டியின்போது தவானின் இடது கை பெருவிரலில் பந்து பட்டதால் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டது. இந்தக் காயம் குணமடைய மூன்று வாரங்கள் ஆகும் என இந்திய அணியின் மருத்துவர் குழு கூறியது.

இந்நிலையில் அவரது காயம் குணமடைய மேலும் சில வாரங்கள் ஆகும் என்று தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இருந்து அவர் விலகியுள்ளார்.
அவருக்குப் பதிலாக ரிஷப் பந்தை அணியில் சேர்க்கப்படுவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments