பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாக சாலையில் ஓடுவதாக குற்றச்சாட்டு

0 379

ராமநாதபுரத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவிவரும் நிலையில், காவிரி கூட்டுக்குடிநீர் குழாயில் வால்விலிருந்து பல லட்சம் லிட்டர் குடிநீர் அடிக்கடி வீணாவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

ராமநாதபுரத்தை அடுத்த காவனூர் பகுதியில் வைகை ஆற்றுப் பாலத்தின் கீழ் காவிரி கூட்டுக்குடிநீருக்கான வால்வு அமைக்கப்பட்டுள்ளது. இந்த வால்வில் நீர் நிரம்பி அதிக அளவிலான நீர் வெளியாவதாகவும் பலமுறை புகார் அளித்தும் மாற்று ஏற்பாடு செய்யப்படவில்லை எனவும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

மாதத்திற்கு ஒருமுறையாவது இதுபோல நீர் நிரம்பி பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாக சாலையில் ஓடுவதாகவும் கூறப்படுகிறது. குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடும் நிலையில் வீணாகும் குடிநீரை முறையாக சேமிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments