ஒலி, ஒளி நிகழ்ச்சியை காண குவியும் கூட்டம்

0 975

சீன தலைநகர் பெய்ஜிங்கில் கண்கவர் ஒலி, ஒளி நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

பெய்ஜிங்கில் உள்ள தேசிய மைதானத்தில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதில் 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை லைட்டுகள் பயன்படுத்தப்படுவதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் சீனாவின் தொழில்நுட்ப வளர்ச்சியை குறிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சியில் முழுக்க முழுக்க அந்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட லைட்டுகள் பயன்படுத்தப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

வண்ணமயமான இந்த நிகழ்ச்சியை காண பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிகழ்ச்சி இந்த ஆண்டு அக்டோபர் மாதம் இறுதி வரை தினமும் உள்ளூர் நேரப்படி இரவு 7.30 மணி முதல் 9.30 மணி வரை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments