புவியிலேயே 3, 4-வது முறையாக அதிக வெப்பம் பதிவு

0 4030

குவைத் மற்றும் பாகிஸ்தானில் தான் புவியிலேயே 3-வது மற்றும் 4-வது அதிக வெப்பம் பதிவானதாக ஆய்வு ஒன்று கணித்துள்ளது.

கிட்டத்தட்ட 80 ஆண்டுகளாக உலக வானிலை நிறுவனம் மேற்கொண்டுவரும் ஆய்வில் கலிஃபோர்னியா, துனிசியாவில் முறையே 134 மற்றும் 131 டிகிரி வெப்பம் பதிவானது. ஆனால், இதில் பல ஆய்வாளர்களும் சந்தேகம் எழுப்பி வந்தனர்.

இந்நிலையில் தொடர்ச்சியான ஆய்வில் கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை 21-ம் தேதி குவைத்தின் மிட்ரிபாவில் 129 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. அதேபோல் பாகிஸ்தானின் டர்பத்தில் 2017-ம் ஆண்டு மே 28-ம் தேதி 126 புள்ளி 7 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது.

இதுவே உலகின் மூன்றாவது மற்றும் 4-வது அதிக வெப்பம் என உலக வானிலை நிறுவனம்  அறிவித்துள்ளது. இதை, உலகின் பிற வானிலை ஆய்வாளர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments