விஷால், தேர்தல் நடத்தும் அதிகாரி மீது ஐசரி கணேஷ் புகார்

0 620

நடிகர் சங்க தேர்தல் ரத்தாவதற்கு விஷால் மற்றும் தேர்தல் நடத்தும் அதிகாரி நீதிபதி பத்மநாபன் ஆகியோர் முறையாக செயல்படாதது தான் முக்கிய காரணம் என சுவாமி சங்கரதாஸ் அணியை சேர்ந்த ஐசரி கணேஷ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சென்னை நந்தனத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைகழக அலுவலகத்தில் சுவாமி சங்கரதாஸ் அணியை சேர்ந்த பாக்யராஜ், ஐசரி கணேஷ், பிரஷாந்த் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய ஐசரி கணேஷ், தற்போது விஷால், நாசர், கார்த்தி என யாரும் பதவியில் இல்லாத நிலையில், எவ்வாறு அவர்கள் எல்லா நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியும் என்று கேள்வி எழுப்பினார்.  


இதற்கிடையே, நடிகர் சங்க தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்த கோரி ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து பாண்டவர் அணி சார்பில் விஷால், கருணாஸ் உள்ளிட்டோர் மனு அளித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments