இயக்குநர் பா.ரஞ்சித்தின் முன்ஜாமீன் ஒத்திவைப்பு

0 606

இயக்குநர் பா.ரஞ்சித்தின் முன்ஜாமீன் வழக்கை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

ரஞ்சித்தின் முன்ஜாமீன் மனுவில் ராஜராஜ சோழன் குறித்து வரலாற்றுப் புத்தகங்களில் உள்ள தகவல்களையே பேசியதாகவும், உள்நோக்கத்துடன் எந்த கருத்தையும் பதிவு செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

தனது பேச்சு எந்தத் தரப்பு மக்களிடையேயும் பிளவை ஏற்படுத்தும் வகையில் அமையவில்லை என்றும் முன்ஜாமீன் வழங்கவும் கோரியுள்ளார்.

இன்றைய விசாரணையின் போது எதிர்மனுதாரராக சேர்க்கக் கோரி, முத்துக்குமார் என்பவர் தாக்கல் செய்த மனுவில் சில திருத்தங்களை செய்ய அவகாசம் அளித்து விசாரணையை ஜுன் 21 ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி அதுவரை ரஞ்சித் மீது எவ்வித கைது நடவடிக்கையையும் எடுக்கக்கூடாது என உத்தரவிட்டார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments