மெரினா கடற்கரையில்... தண்ணீர் தட்டுப்பாட்டை போக்கும் அடி பம்புகள்

0 1943

சென்னையின் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்து வரும் நிலையில், சென்னை மெரினா கடற்கரை மணலில் அமைக்கப்பட்டுள்ள அடிபம்புகள் அப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகின்றன.

பருவமழை பொய்த்த காரணத்தால் தமிழகம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது.

imageசென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக நாள் தோறும் 525 MLD நீர் வழங்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தாலும், பெரும்பாலான பகுதிகளில் காலிக்குடங்களுடன் மக்கள் குடிநீருக்காக காத்திருக்கும் காட்சிகளையே அதிகம் காண முடிகிறது 

சமீபத்தில் சென்னை மெரினா கடற்கரையில் கலங்கரை விளக்கு பின்புறம் உள்ள மணல் பரப்பில் 4 இடங்களில் போர் போடப்பட்டு, அடிபம்புகள் அமைக்கப்பட்டன. நொச்சிக்குப்பம், பட்டினபாக்கம்  மற்றும் கடற்கரையில் சிறு கடைகள் அமைத்துள்ள வியாபாரிகளுக்கு இந்த தண்ணீர் மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. 

imageகடல் நீரில் இருந்து 100 மீட்டருக்குள்ளாக அமைக்கப்பட்டுள்ள இந்த பம்புகள் மூலம் 24 மணி நேரமும் சுத்தமான குடிநீர் கிடைக்கிறது.

கடல்நீரை குடிநீராக மாற்ற கோடிக்காணக்கில் செலவு செய்யும் அரசு, கடற்கரை மணல்பரப்பில் இது போன்று மேலும் பல அடிபம்பு வசதியை செய்து கொடுத்தால் கடற்கரை பகுதியில் வசிப்பவர்களின் குடிநீர் தட்டுப்பட்டிற்கு தீர்வாக அமையும் என்பது அப்பகுதி மக்களின் கருத்தாக உள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments