அரசு நில ஆக்கிரமிப்பில் அரசு அதிகாரிகளுக்கு தொடர்பு - ரயில்வே நிர்வாகம்

0 707

சென்னை வேளச்சேரியில், அரசு புறம்போக்கு நில ஆக்கிரமிப்பில் அரசுத்துறை அதிகாரிகளும் சம்பந்தப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வேளச்சேரியில் ரயில்வேக்கு என ஒதுக்கப்பட்டுள்ள நிலத்தில் பல ஆண்டுகளாக வணிக வளாகங்கள், குடியிருப்பு சார்ந்த கட்டிடங்கள் என ஏராளமான கட்டிடங்கள் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டு இயங்கிவந்தன. சுமார் 200 கோடி மதிப்புகொண்ட அவ்விடத்தில் இடம்பெற்றிருக்கும் ஆக்கிரமிப்புகள் தொடர்பாக பல்வேறு காலக்கட்டங்களில் பல்வேறு வழக்குகள் நடைபெற்று வந்தன.

இறுதியாக உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடங்கியுள்ளன. இதனிடையே, ஆக்கிரமிப்பு நிலம் எனத் தெரிந்தும் மின் இணைப்பு, குடிநீர் உள்ளிட்ட வசதிகளை அரசு அதிகாரிகள் சட்டத்திற்கு புறம்பாக வழங்கியதாக ரயில்வே நிர்வாகத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். அதிமுக பிரமுகர்கள் இருவர் ஆக்கிரமிப்பு நிலத்தில் வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவற்றை கட்டி பயன்பாட்டுக்கு விட்டதாகவும் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments