3 பெண்களை ஏமாற்றித் திருமணம் செய்த நபர் கைது

0 723

சென்னை வளசரவாக்கத்தில் 3 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த நபர் கைது செய்யப்பட்டார். கேரளாவைச் சேர்ந்த 46 வயதான அஜித்குமார் தற்போது சாலிகிராமத்தில், நிகழ்ச்சிகள் மேலாண்மை நிறுவனம் நடத்தி வருகிறார்.

இவருக்கு 27 வயதான தேவிகா என்ற மனைவியும்
6 வயது மகனும் உள்ளனர். இந்த நிலையில், வளசரவாக்கம் போலீசில் தேவிகா தனது கணவர் மீது புகார் ஒன்றை அளித்தார். அதில், அஜித் குமாருக்கு ஏற்கெனவே இரு திருமணங்கள் நடந்திருப்பதாகவும் 3 பிள்ளைகள் உள்ளதாகவும் கூறியுள்ளார்.

1998ஆம் ஆண்டில் கேரளாவில் ஜோதி என்ற பெண்ணையும், 2001ஆம் ஆண்டில் டெலிலா என்ற பெண்ணையும் அஜித் குமார் திருமணம் செய்து கொண்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

ஜோதி என்ற பெண் தன்னை தொடர்பு கொண்டு பேசிய போது தான் இந்த விவரங்கள் தெரிய வந்ததாகவும் தேவிகா தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

புகார் மீது போலீசார் விசாரணை நடத்திய போது,
திருமண மோசடியை அஜித் குமார் ஒப்புக் கொண்டதாகக் கூறப்படுகிறது.இதை அடுத்து அவரை பெண் வன்கொடுமை பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments