ஆளுநரை சந்தித்து மனு அளித்த நடிகர் விஷால்

0 379

நடிகர் சங்க தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்த வேண்டுமென ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து நடிகர் விஷால் மனு அளித்தார்.

ஆளுநர் மாளிகையில் நடந்த இந்த சந்திப்பின் போது பூச்சி முருகன், கருணாஸ் ஆகியோர் உடனிருந்தனர். பிறகு செய்தியாளர்களை சந்தித்த விஷால், நீதிமன்ற தீர்ப்பின் வழிகாட்டுதலின் படி முறையாகவும் பாதுகாப்பாகவும் தேர்தல் நடத்த ஆவண செய்யப்படும் என ஆளுநர் கூறியதாக தெரிவித்தார்.

மேலும், தேர்தல் நடத்துவதற்கான மாற்று இடம் குறித்து நீதிமன்றத்தில் தெரிவிப்போம் எனவும் விஷால் கூறினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments