கிராம கோவில்களை அறநிலையத்துறை கட்டுப்பாட்டுக்கு கொண்டு செல்ல எதிர்ப்பு

0 548

மதுரையில், அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டுக்குள் தங்கள் கிராம கோவில்களை கொண்டு செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை மாவட்டம், மேலூர் அருகே வெள்ளலூர், உறங்காம்பட்டி, புலிமலைபட்டி உள்ளிட்ட 62 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் வழிப்பட்டு வரும் ஏழை காத்த அம்மன் கோவில், வல்லடிகாரர் சுவாமி கோவில் உள்ளிட்ட கோவில்களை அறநிலையத்துறை கட்டுப்பாட்டுக்கு கொடுக்க முடிவு செய்யப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 62 கிராமங்களை சேர்ந்த பெண்கள் உட்பட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கடைகளை அடைத்து, வெள்ளலூரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அறநிலையத்துறை அதிகாரி விஜயன், மேலூர் வட்டாச்சியர் சிவகாமிநாதன், மதுரை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வனிதா ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அதன் முடிவில் கோவில்கள் கிராமத்தின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும் என்று அறநிலைய துறை அதிகாரி ஓப்புதல் அளித்தார். இதனையடுத்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments