காவல் நிலையம் முன் பிளேடால் கழுத்தை அறுத்துக் கொண்ட இளைஞர்

0 334

மனைவி தன்னை தாக்கியதாக அளித்த புகாரை போலீசார் ஏற்காததால் சென்னை அசோக் நகர் காவல் நிலையத்தில் இளைஞர் பிளேடால் தனது கழுத்தை அறுத்துக்கொண்டார்.

சென்னை நெசப்பாக்கம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் கார்த்திக். இவர் மீது அசோக்நகர் மற்றும் ராயலா நகர் காவல் நிலையங்களில் சில குற்ற வழக்குகள் உள்ளன.

இந்நிலையில் நேற்று இவர் தனக்கும் தனது மனைவி சுமித்ராவுக்கும் தகராறு ஏற்பட்டதாகவும் அப்போது தனது மனைவி தன்னை தாக்கிவிட்டதாகவும் அசோக் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

தனது மனைவி மீது நடவடிக்கை எடுக்கவும் அவர் வலியுறுத்தினார். ஆனால் குடும்பத் தகராறுகளுக்கு வழக்கு பதிவு செய்ய முடியாது என்று கூறி போலீசார் கார்த்திக்கை திருப்பி அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து மனைவி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல் நிலையத்தின் வெளியே கார்த்திக் தனது கழுத்தை அறுத்துக்கொண்டார். உடனடியாக அவரை மடக்கிப் பிடித்த போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments