குடிநீர் பிரச்சனையை வைத்து அரசியல் செய்வது சரியல்ல - ஜெயக்குமார்

0 419

நவம்பர் வரை குடிநீர் பிரச்சனை இல்லாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை நந்தம்பாக்கத்தில் ஆசிய பசிபிக் நீர்வாழ் உயிரின வளர்ப்பு - 2019 என்ற 3 நாள் சர்வதேச கருத்தரங்கத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார்.

இதில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் இந்தியாவில் பல மாநிலங்கள் உள்ள நிலையில் தமிழகத்தில் இந்தக் கருத்தரங்கம் நடைபெறுவது பெருமைக்குரியது என்றார்.

குடிநீர் பிரச்சனையை போக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், இதை வைத்து அரசியல் செய்வது சரியல்ல என்றார்.

மீன் பிடி தடைகாலம் என்பது எல்லா கடற்கரை மாநிலங்களும் சேர்ந்து எடுத்த முடிவு என்றும் அதனை மாற்றுவது குறித்து பரிசீனை செய்யப்பட்டு வருவதாகவும் ஜெயக்குமார் தெரிவித்தார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments