குற்றச்சம்பவங்களை கண்காணிக்கும் பணியில் போலீசாருக்கு பதில் ரோபோக்கள்

0 503

அமெரிக்காவில், குற்றச்சம்பவங்களை கண்காணிக்கும் பணியில் போலீசாருக்கு பதில் ரோபோக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

பொது இடங்களில் குற்றச்செயல்கள் நடப்பதை கண்காணிக்கவும், தடுக்கவும் அமெரிக்காவில் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

அந்தவகையில், கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஹண்டிங்டன் பூங்காவில், பொதுமக்கள் குற்றச்செயலில் ஈடுபடுவதை கண்காணிக்கவும், தரவுகளை சேகரித்து போலீஸ் தலைமையகத்துக்கு அனுப்பி உடனடி நடவடிக்கை எடுக்கவும், ‘HP Robocop’ என்ற ரோபோ ஒன்று ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

4 புறமும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள இந்த மனித உயரத்திலானது ரோபோவானது, ‘‘கொஞ்சம் வழிவிடுங்கள்’’ மற்றும் ‘‘இன்றைய தினம் நல்ல நாளாக அமையட்டும்’’ போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி பூங்காவுக்கு வருவோரை கவர்ந்து வருகிறது.

பூங்காவில் உள்ள ரோபோ போன்று, கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள முக்கிய தெருக்களிலும் போலீஸ் ரோபாக்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments