காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு 49வது பிறந்தநாள்..

0 389

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் 49ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனால், டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் உற்சாகம் கரைபுரள்கிறது. வீட்டிலிருந்து காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு வந்த ராகுல் காந்தி, அங்கு நின்றிருந்த செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்களுக்கு, பிறந்தநாள் இனிப்புகளை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சி தொண்டர்கள், ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்தனர். காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், சித்தராமையா உள்ளிட்டோர் ராகுல் காந்திக்கும் நேரில் வாழ்த்துத் தெரிவித்தனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments