நடிகை பிரியங்கா சோப்ராவின் மெழுகு சிலை

0 762

லண்டனில் உள்ள மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது.

பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா, ஹாலிவுட் படங்களிலும் நடித்து சர்வதேச அளவில் ரசிகர்களை பெற்றுள்ளார். இந்நிலையில் அவரது மெழுகு சிலை லண்டனில் உள்ள புகழ்பெற்ற மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டு நடந்த கோல்டன் குலோப் விருது வழங்கும் விழாவில் பிரியங்கா சோப்ரா கலந்து கொண்ட போது அணிந்திருந்த உடை, நகைகள் மற்றும் மேக்அப் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இந்த சிலை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சிலை திறப்பு விழாவில் நடிகை பிரியங்கா சோப்ரா கலந்து கொள்ளவில்லை.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments