15 வயது சிறுவனின் முகத்தில் ஆழமாக குத்திய 10 அங்குல கத்தி

0 367

அமெரிக்காவின் கன்சாஸ் மாநிலத்தை சேர்ந்த 15 வயது சிறுவனின் முகத்தில் ஆழமாக குத்திய 10 அங்குல கத்தியை மருத்துவர்கள் நீக்கி உள்ளனர்.

தனது வீட்டின் வெளியே சிறுவன் விளையாடி கொண்டு இருந்த போது கீழே விழுந்துள்ளான். அப்போது அங்கு கிடந்த கத்தி, அச்சிறுவனின் வலது கண்ணுக்கு கீழே ஆழமாக குத்தியது.

இதனையடுத்து அச்சிறுவனின் அலறல் கேட்டு வீட்டில் இருந்து வெளியே வந்த சிறுவனின் தாய், அதிர்ச்சியடைந்து கத்தியை வெளியே எடுக்க முயன்றுள்ளார். ஆனால் அவரால் முடியாத நிலையில் சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.

அந்த கத்தி, மூளைக்கு செல்லும் ரத்த குழாயில் சிக்கிக் கொண்ட நிலையில், மருத்துவர்கள் அதனை 4 மணி நேர அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக நீக்கியுள்ளனர். மேலும் அந்த சிறுவன் விரைவில் முழுமையாக குணமடைந்து விடுவான் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments