2020 அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் - புளோரிடாவில் டிரம்ப் தொடக்கம்

0 503

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், புளோரிடாவில் தொடங்கினார்.

அமெரிக்காவின் 46ஆவது அதிபரைத் தேர்வு செய்யும் தேர்தல் அடுத்த ஆண்டு நவம்பர் 3ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் டொனால்ட் டிரம்ப் மீண்டும் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடுகிறார். இதற்கான பிரச்சாரத்தை அவர் ஃபுளோரிடா மாநிலத்தின் ஆர்லண்டோ நகரில் தொடங்கினார்.

அங்கு திரண்டிருந்த 20 ஆயிரம் பேருக்கு மத்தியில் பேசிய டிரம்ப், பலம் பொருந்திய சிறப்பான நாடாக அமெரிக்காவை தொடர்ந்து வைத்திருக்கப் போவதாக சூளுரைத்தார். அமெரிக்காவின் பொருளாதாரம் உலக நாடுகளை பொறாமைப்பட வைத்திருப்பதாகத் தெரிவித்த டிரம்ப், வேலைவாய்ப்பும் அதிகரித்திருப்பதால் தாம் மீண்டும் அதிபராவது உறுதி என்று நம்பிக்கை தெரிவித்தார்.

பிரச்சாரத்தின் போது செய்தி சேகரித்துக் கொண்டிருந்த பத்திரிக்கையாளர்களை, பொய் செய்திகள் எனப் பொருள்படும் ஃபேக் நியூஸ் என்ற வார்த்தையால் விமர்சித்தார்.
எதிர்க்கட்சிகள் நாட்டை அழிக்க நினைப்பதாக குற்றம்சாட்டிய டிரம்ப், இதை ஏற்றுக் கொள்ளவும் முடியாது, நடந்து விடவும் கூடாது என்று கூறினார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments