நேர்மையற்ற முறையில் பணிநியமனம் பெறுவோரிடம் நேர்மையை எதிர்பார்க்க முடியாது

0 407

நேர்மையற்ற முறையில் பணிநியமனம் பெறும் ஊழியர்களிடம் நேர்மையை எதிர்பார்க்க முடியாது என கருத்து தெரிவித்துள்ள உயர்நீதிமன்ற மதுரை கிளை, கடைநிலை பணியாளர்களை எழுத்து தேர்வு அடிப்படையில் தேர்வு செய்வதற்கான வழிகாட்டுதல்களை அரசு பிறப்பிக்க உத்தரவிட்டுள்ளது.

தேனியை சேர்ந்த மாற்றுதிறனாளி உதயகுமார், நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அதில், தனக்கு பின் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பித்த சேகர் என்பவருக்கு சிபாரிசு அடிப்படையில் காமயகவுண்டன்பட்டி பஞ்சாயத்து யூனியனின் இரவு காவலர் பணி கிடைத்ததாக தெரிவித்தார். எனவே சேகரின் பணிநியமனத்தை ரத்து செய்து தனக்கு அப்பணியை வழங்க வேண்டும் என்று கோரினார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணி, வெகுதாமதமாக மனு அளிக்கப்பட்டுள்ளதால் சேகரின் பணி நியமனத்தை ரத்து செய்ய முடியாது என தெரிவித்தார். மேலும் நேர்மையற்ற முறையில் நியமனம் பெறும் அரசு ஊழியர்களிடம் நேர்மையை எப்படி எதிர்பார்க்க முடியும் என கருத்து தெரிவித்த நீதிபதி, திறனற்ற நிர்வாகம் என்பது நாட்டின் முன்னேற்றத்திற்கு கரும் புள்ளியாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை என குறிப்பிட்டார்.

தொடர்ந்து கடைநிலை பணியாளர்களை எழுத்து தேர்வு அடிப்படையில் தேர்வு செய்வதற்கான வழிக்காட்டுதலை தலைமை செயலர் பிறப்பிக்க உத்தரவிட்டு வழக்கை ஜூலை 24ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments