மயில் சிலை திருட்டு வழக்கு -விசாரிக்காமல் வழக்குப்பதிவு செய்தது ஏன்?

0 488

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் மயில் சிலை திருடப்பட்ட வழக்கில், முதற்கட்ட விசாரணை நடத்தாமல் முத்தையா ஸ்தபதியின் மீது வழக்கு பதிவு செய்தது ஏன்? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் மயில் சிலை திருட்டு தொடர்பாக வழக்கு பதிவு செய்த சிலைகடத்தல் தடுப்பு பிரிவு, தலைமை ஸ்தபதி முத்தையாவை கைது செய்தது. பின்னர் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில், தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி முத்தையா ஸ்தபதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

அந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, 14 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சம்பவம் குறித்து எந்த அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது எனவும், முதற்கட்ட விசாரணை நடத்தாமல் முத்தையா ஸ்தபதி மீது வழக்கு பதிவு செய்தது ஏன் எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

மேலும், முழுமையான விசாரணைக்கு பிறகு முத்தையா ஸ்தபதி குற்றவாளி என நிரூபிக்க எந்த ஆவணமும் கிடைக்கவில்லை என்றால் அவரை கைது செய்தது தவறாகிவிடும் எனத் தெரிவித்த நீதிபதி, ஜூலை 7-ம் தேதிக்குள் இந்த வழக்கு குறித்த விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். அதுவரை இந்த வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய கூடாது எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments