நடிகர் சங்க தேர்தல் திட்டமிட்ட தேதியில் திட்டமிட்ட இடத்தில் நடைபெறாது - எஸ்.வி.சேகர்

0 769

நடிகர் சங்கத் தேர்தல் வரும் 23ம் தேதி சென்னை அடையாறில் உள்ள எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் நடைபெற வாய்ப்பில்லை என்றும் அன்றைய தினம் அங்கு தனது நிகழ்ச்சிக்கு அனுமதி பெற்றுள்ளதாகவும் நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.நடிகர் சங்கத் தேர்தல் வரும் 23-ஆம் தேதி, சென்னை அடையாறில் உள்ள எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அன்றைய தினம், எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் தனது நிகழ்ச்சியை நடத்த அனுமதி பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ள எஸ்.வி.சேகர் அதற்கான ரசீது உள்ளிட்ட ஆவணங்களை வெளியிட்டுள்ளார். அன்று நிகழ்ச்சியை நடத்தப்போகிறீர்களா என்ற கேள்விக்கு நிகழ்ச்சியை நடத்துவது தனது விருப்பத்துக்குட்பட்டது என்றும் அவர் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments