துப்புரவு மற்றும் தோட்டப் பணியாளர்கள் உள்ளிட்ட கடை நிலைப் பணிக்கும் எழுத்து தேர்வு மூலம் தேர்ந்தெடுக்க உத்தரவு

0 1054

கடைநிலை பணிகளுக்கும் எழுத்து தேர்வு முறையில், பணியாளர்களை தேர்வு செய்யும் வழிகாட்டுதல்களை பிறப்பிக்கும்படி, அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. தேனியை சேர்ந்த மாற்றுதிறனாளி உதயகுமார், நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

அதில், காமயகவுண்டன்பட்டி பஞ்சாயத்து யூனியன் செயலாளரின் நெருங்கிய உறவினர் என்பதால், தனக்கு பின் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பித்த சேகர் என்பவருக்கு, இரவு காவலர் பணி வழங்கப்பட்டுள்ளதாகவும், அவரது பணிநியமனத்தை ரத்து செய்து தனக்கு அந்த பணியை வழங்க வேண்டும் என்று கோரினார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணி, பணிநியமனம் நடந்த 8 ஆண்டுக்குபின் இந்த மனு அளிக்கப்பட்டுள்ளதால், சேகரின் பணியை ரத்து செய்ய முடியாது என தெரிவித்தார். பின்னர் துப்புரவு பணியாளர், தோட்ட பணியாளர், மதிய உணவு ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட கடை நிலை பணிகளுக்கும் எழுத்து தேர்வு முறையில், பணியாளர்களை தேர்வு செய்யும் வழிகாட்டுதல்களை பிறப்பிக்கும்படி அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

நேர்முகத்தேர்வின் போது வழங்கப்படும் மதிப்பெண்கள் 15 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கக்கூடாது என்றும், அதுசார்ந்த அறிக்கையை தலைமை செயலாளர் ஜூலை மாதம் 24ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments