காவிரி கூட்டுக் குடிநீர் திட்டக்குழாய் உடைப்பு காரணமாக சாலையோரம் வீணாகி வரும் குடிநீர்

0 220

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே, காவிரி கூட்டுக் குடிநீர் திட்டக்குழாய் உடைந்து பெருமளவில் குடிநீர் வீணாகி வருகிறது.

குளித்தலை அருகே, மகாதானபுரம் காவிரி ஆற்றிலிருந்து, காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம், மதுரை மேலூர் பகுதிக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த குடிநீர் திட்ட பைப்லைன், மணப்பாறை நெடுஞ்சாலை -இரும்புலிப்பட்டி அருகேவுள்ள சாலைப்பட்டி கிராமத்தில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

கடும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ள சூழலில், குடிநீர் வீணாவது கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் லியாகத்துக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் குடிநீர் விநியோகம் செய்யும் மின்மோட்டார் மின்பொறியாளர்கள் கொண்டு உடனடியாக நிறுத்தப்பட்டது. குடிநீர் வெளியேறுவது உடனடியாக நின்றதும், சீரமைப்பு பணியில் ஊழியர்கள் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT