தலைக்கவசம் அணியாமல் சென்ற இருசக்கர வாகன ஓட்டிகள் 500 பேருக்கு அபராதம்

0 658

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற, சுமார் 500 பேருக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.

வாகன ஓட்டிகளை கட்டாயம் தலைக்கவசம் அணியச் செய்ய வேலூர் மாவட்ட காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் ஒருபகுதியாக திருப்பத்தூர் அருகே காவல்துறையினர் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது தலைக்கவசம் அணியாமல் வந்த 500 பேருக்கு அபராதம் விதித்ததோடு, தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து போலீசார் அறிவுரை வழங்கினர்.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பர்வேஷ்குமார், சுமார் 100 பேருக்கு தலைக்கவசங்களை இலவசமாக வழங்கியது குறிப்பிடத்தக்கது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments