இளையராஜாவை புலம்ப விட்ட புரட்சி தளபதி..! காய்ச்சி எடுத்த தயாரிப்பாளர்கள்

0 1027

ளையராஜாவுக்கு பாராட்டு விழா  நடத்துவதாக கூறி வசூலித்த பணத்தில் ஒரு கோடி ரூபாய் கொடுக்காமல் நடிகர் விஷால், இளையராஜாவை தவிக்கவிட்டு விட்டதாக தயாரிப்பாளர் சங்க முன்னாள் தலைவர் கேயார் குற்றஞ்சாட்டி உள்ளார்.

அயோக்யா புகழ் விஷாலால் இப்போது இளையராஜா தனக்கு தானே பாடிவருவதாக தெரிவித்த தயாரிப்பாளர் சங்க முன்னாள் தலைவர் கேயார், இளையராஜாவுக்கு நடந்த பாராட்டு விழா இசை நிகழ்ச்சிக்கு கொடுக்க வேண்டிய தொகையில் ஒரு கோடி ரூபாயை இன்னும் கொடுக்கவில்லை என்று குற்றஞ்சாட்டினார்.

தன்னை படிக்காதவன் என்று மறைமுகமாக விமர்சித்த விஷாலை, அகற்றப்பட வேண்டிய கரும்புள்ளி என்று பாரதிராஜா சாடினார்.

விஷாலால் சினிமா தயாரிப்பாளர்கள் பலர் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக கூறி பட்டியல் வெளியிட்ட தயாரிப்பாளர் ராஜன், தற்போது நடிகர் சங்க தேர்தலில் விஷாலுக்கு போட்டியாக பொது செயலாளர் பதவிக்கு களம் இறங்கி உள்ள ஐசரி கணேசுக்கும் 5 கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தியவர் விஷால் என்று காய்ச்சி எடுத்தார்.

நடிகர் சங்க தேர்தலில் விஷால் அணிக்கு எதிராக களம் இறங்கியுள்ள பாக்கியராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியினர் விஷால் மீது அடுக்கடுக்கான குற்றஞ்சாட்டுக்களை முன்வைத்து வருவது குறிப்பிடதக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments