விராட் கோலி புதிய உலக சாதனை..!

0 5004

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் உலகளவில் அதிவேகமாக 11 ஆயிரம் ரன்களைக் கடந்த வீரர் எனும் சிறப்பை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பெற்றுள்ளார்.

உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் களமிறங்கிய அவர், இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். இப்போட்டியில், 57 ரன்களை அவர் கடந்தபோது, ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 11 ஆயிரமாவது ரன்னை கோலி பதிவு செய்தார்.

தான் சந்தித்த 230ஆவது போட்டியிலேயே இந்த இலக்கை எட்டியதன் மூலம் அதிவேகமாக 11 ஆயிரம் ரன்களைக் கடந்து கோலி உலகளவில் முதலிடம் பிடித்துள்ளார். 17 ஆண்டுகளாக நீடித்து வந்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையானது இதன் மூலம் தகர்க்கப்பட்டுள்ளது. சச்சின் தனது 284ஆவது போட்டியில் இந்த இலக்கை எட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments