சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் அனல் காற்று வீசும்: வானிலை மையம்

0 1353

சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் கடும் அனல் காற்று வீச வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை மையம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் தென்மேற்கு பருவ மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.

குறிப்பாக, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதுதவிர, வெப்ப சலனம் காரணமாக, சேலம், நாமக்கல், ஈரோடு, புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வடக்கு மாவட்டங்களான, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலுர், திருவண்ணாமலை கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெப்பம் நிலவும் என்றும், தீவிர அனல் காற்று வீச வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்கலாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

பரவலாக மழை பெய்தால் தான், வெப்பம் குறைய வாய்ப்பு ஏற்படும் என்றும், இல்லையேல், வெப்பம் அதிகரித்தே காணப்படும் என்றும், வானிலை மையம் கூறியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக, வேலூர் மாவட்டம் கலவையில் 4 சென்டி மீட்டர் மழைப் பதிவாகியுள்ளது.

நீலகிரி மாவட்டம் தேவாலா, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, சேலம் மாவட்டம் ஓமலூர் ஆகிய இடங்களில் 2 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 41 டிகிரி செல்சியசாக இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments