மோசமான புதிய வரலாறு ஒன்றை படைக்க உள்ளது சென்னை...!!

0 33194

தொடர்ந்து ஒரு துளி கூட மழையே பெய்யாத நாட்களின் எண்ணிக்கையில் சென்னை மாநகரம் மோசமான புதிய வரலாறு ஒன்றை படைக்க உள்ளது.

சென்னையில் கடந்த 191 நாட்களாக மழை பெய்யவில்லை. கடந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழையின் போது தான் சென்னையில் மழை பெய்தது. 2015ஆம் ஆண்டில் தொடர்ந்து 193 நாட்கள் சென்னையில் மழை பெய்யாமல் இருந்ததே மோசமான வரலாறாக இருந்தது.

கடந்த ஆண்டில் இறுதியாக மழை பெய்த நாள் தொடங்கி இந்த ஆண்டில் தற்போது வரை சென்னையில் மழையே பெய்யாத நாட்களின் எண்ணிக்கை 191 ஆக இருக்கும் நிலையில் இன்னும் இரண்டு, மூன்று நாட்கள் இதே நிலைமை நீடித்தால், மழையே பெய்யாத நாட்களின் எண்ணிக்கையில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத மோசமான வரலாற்றை சென்னை மாநகரம் படைக்கும்.

தொடர்ந்து மழை பெய்யாமல் இருக்கும் பட்சத்தில் தண்ணீர் தட்டுப்பாடும் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments