தென்மேற்கு பருவமழையால் திற்பரப்பு அருவிக்கு நீர்வரத்து அதிகரிப்பு

0 329

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திற்பரப்பு அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை பெய்து வரும் நிலையில், புகழ்பெற்ற திற்பரப்பு அருவியில் தண்ணீர் கொட்டுகிறது. வார இறுதிநாள் என்பதால் தமிழகம், கேரளாவை சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து அருவியில் குளித்து மகிழ்கின்றனர்.

இதுமட்டுமின்றி, சுற்றுலா பயணிகள் கோதையாற்றில் படகு சவாரி செய்து மகிழ்கின்றனர்.

திற்பரப்பு அருவில் தடை செய்யப்பட்டுள்ள பகுதியில் உள்ள உயரமான பாறைகளில் ஏறி நின்று சிலர் ஆபத்தை உணராமல் செல்பி எடுக்கின்றனர். இதுதொடர்பாக உரிய நவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments