குடிபோதையில் அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுனர்

0 1490

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அடுத்த சிங்கபெருமாள் கோயில் பகுதியில் குடிபோதையில் தமிழக அரசுப் பேருந்தை ஓட்டிய  ஓட்டுனர் மற்றும் நடத்துனரை பயணிகளே போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

சென்னை கோயம்பேட்டில் இருந்து திருச்சிக்கு அரசுப் பேருந்தை துரைராஜ் என்பவர் ஓட்டி சென்றார். பேருந்து கட்டுப்பாடின்றி தாறுமாறாக ஓடியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பயணிகள்  நடத்துனர் பிரபாகரனிடம் முறையிட்டுள்ளனர். ஆனால் நடத்துனரும், ஓட்டுனரும் பயணிகளை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பயணிகள்  சிங்கபெருமாள் கோயில் பகுதியில் பேருந்தை நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் அளித்த தகவலின் பேரில்  அங்கு வந்த போலீசார் ஊதுகுழல் மூலம் பரிசோதனை செய்தனர்.  இருவரும் குடிபோதையில் இருந்ததை உறுதி செய்த பின்னர்  வழக்கு பதிவு செய்து அவர்களைக் கைது செய்தனர். பின்னர் மாற்று பேருந்து வரவழைக்கப்பட்டு பயணிகள் ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments