குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாமும் தூக்கிட்டுத் தற்கொலை செய்த தாய்

0 239

குடும்பத் தகராறில் மனம் உடைந்த தாய் இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாமும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்டார். வேலூர் மாவட்டம் இராணிப்பேட்டை அடுத்த காவேரிப்பாக்கம் அருகே உள்ள கிராமத்தில் வசித்து வந்த தம்பதியர் சங்கர்-நித்யாவுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகி விட்டன.

இவர்களுக்கு அஸ்வினி என்ற ஏழு வயது மகளும் தனுஷ் என்ற 4 வயது மகனும் உள்ளனர். கணவன்-மனைவி இடையே பல மாதங்களாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது.

சங்கர் பணி நிமித்தமாக சென்னை சென்ற நிலையில் வீட்டில் தனியாக இருந்த நித்யா, தனது மகள் மற்றும் மகனுக்கு விஷம் கொடுத்து தாமும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்டார்.  போலீசார் உடல்களைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT