நடிகர் கமல்ஹாசனை சந்தித்து ஆதரவு திரட்டிய பாக்யராஜ், விஷால்

0 312

நடிகர் சங்கத்தேர்தலில் போட்டியிடும் சுவாமி சங்கரதாஸ் அணியினர் மற்றும் பாண்டவர் அணியினர் நடிகர் கமல்ஹாசனை சந்தித்து ஆதரவு திரட்டினர்.

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வருகிற 23ம் தேதி நடைபெறுகிறது. இதில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியை எதிர்த்து பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியினர் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், சுவாமி சங்கரதாஸ் அணியை சேர்ந்த பாக்யராஜ், ஐசரி கணேஷ் உள்ளிட்டோர் சென்னை, ஆழ்வார்பேட்டையில் நடிகர் கமல்ஹாசனை அவரது இல்லத்தில் சந்தித்து ஆதரவு திரட்டினர். இதைத்தொடர்ந்து, நடிகர் கமல்ஹாசனை பாண்டவர் அணியை சேர்ந்த விஷால் உள்ளிட்டோர் சந்தித்து ஆதரவு கோரினர்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய விஷால், சரத்குமாரை விமர்சித்து தாங்கள் வீடியோ வெளியிடவில்லை என்றும், தாங்கள் செய்ததை சொல்லவே வீடியோ வெளியிட்டோம் எனவும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments