நடிகர் விஷாலின் வளர்ப்பு சரியில்லை - வரலட்சுமி

0 13139

தரம் தாழ்ந்த வீடியோக்களை விஷால் வெளியிடுவதன் மூலம் அவரது வளர்ப்பு சரியில்லை என்பதை  தன்னால் புரிந்து கொள்ள முடிவதாக நடிகை வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார்.

நடைபெறவுள்ள நடிகர் சங்க தேர்தலில், வெற்றிப்பெறும் நோக்கில் பாண்டவரணி மற்றும் சுவாமி சங்கரதாஸ் அணியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை வரலட்சுமி பாண்டவரணி சார்பில் போட்டியிடும் நடிகர் விஷாலுக்கு டுவிட்டரில் கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில், சாதனைகளை விளக்கி தேர்தல் பிரச்சார வீடியோ வெளியிடுவதற்கு பதில், தனது தந்தையை இழிவுப்படுத்தும் வீடியோ வெளியிட்டு விஷால் பிரச்சாரம் செய்வதாக வேதனை தெரிவித்தார்.

இதன் மூலம் விஷாலின் வளர்ப்பு சரியில்லை என்பதை புரிந்து கொள்ள முடிவதாக குறிப்பிட்ட அவர், ஏதேனும் வகுப்பில் கலந்து சற்று முதிர்ச்சி பெறும்படி விஷாலை அறிவுறுத்தினார்.

மேலும் திரைக்கு வெளியேயும் விஷால் நல்ல நடிகர் என்பதை நிரூபித்துவிட்டதாக கூறிய வரலட்சுமி, விஷால் மீதான மதிப்பு குறைந்து விட்டதாகவும், நடிகர் சங்க தேர்தலில் தனது வாக்கை விஷால் இழந்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments