நடிகர் சங்க தேர்தலில் என் வாக்கு விஷாலுக்கு இல்லை

0 923

நடைபெறவுள்ள தென்இந்திய நடிகர் சங்க தேர்தலில் தனது வாக்கு நடிகர் விஷாலுக்கு இல்லை என அவரது தோழியும், நடிகையுமான வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார்.

தென்இந்திய நடிகர் சங்க தேர்தல் வருகிற 23ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கென அனைத்து அணிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், நடிகை வரலட்சுமி பாண்டவரணி சார்பில் போட்டியிடும் நடிகர் விஷாலுக்கு டுவிட்டரில் கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.

அதில், சாதனைகளை விளக்கி தேர்தல் பிரச்சார வீடியோ வெளியிடுவதற்கு பதில், தனது தந்தையை இழிவுப்படுத்தும் வீடியோ வெளியிட்டு விஷால் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார்.

இதன் மூலம் தான் அவர் மீது வைத்திருந்த மரியாதையை விஷால் இழந்துவிட்டதாக குறிப்பிட்ட அவர், ஏதேனும் வகுப்பில் கலந்து சற்று முதிர்ச்சி பெறும்படி விஷாலை அறிவுறுத்தியிருந்தார்.

மேலும் திரைக்கு வெளியேயும் விஷால் நல்ல நடிகர் என்பதை நிரூபித்துவிட்டதாக குறிப்பிட்ட அவர், விஷாலுடனான தனது நட்பில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், நடிகர் சங்க தேர்தலில் தனது வாக்கை விஷால் இழந்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments