மத்திய கைலாஷ் பகுதியில் ஏற்பட்ட திடீர் பள்ளம்

0 259

சென்னை அடையாறு மத்திய கைலாஷ் பகுதியில் ஏற்பட்ட பள்ளத்தை சரி செய்வதற்கான பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன.

பக்கிங்காம் கால்வாய் குழாய்களை சீரமைக்கும் பணி நடைபெற்ற போது குழாயில் கசிவு ஏற்பட்டதில் மணல் அரிப்பு ஏற்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் மத்திய கைலாஷ் பகுதியில் வாகனங்களின் அழுத்தம் காரணமாக 5 அடி ஆழத்திற்கு மிகப்பெரிய பள்ளம் உருவானது.

இதனால் தடுப்புகள் அமைத்து பொதுமக்களுக்கு ஆபத்தில்லாத வகையில் பள்ளத்தை மூடும் பணியில் மெட்ரோ வாட்டர் ஊழியர்கள் ஈடுபட்டனர். ஆனால் கசிவு ஏற்பட்ட குழாய் முழுவதுமாக உடைந்துவிட்டதால் அதனை சரிசெய்த பின்னரே பள்ளத்தை மூட முடியும் என்று ஊழியர்கள் தெரிவித்தனர். இதற்கான பணிகள் இன்று தொடங்குகின்றன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments