எல்லா பகுதிகளிலும் அனைவரும் இணையத்தை அணுகும் வசதி - இந்தியாவுக்கு அமெ., பாராட்டு

0 462

2022ஆம் ஆண்டுக்குள் இந்தியா முழுவதும் எல்லா பகுதிகளிலும் அனைவரும் இணையத்தை அணுகும் வகையிலான கட்டமைப்புகளை உருவாக்குவதற்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு துணிச்சலான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அமெரிக்கா  பாராட்டு தெரிவித்துள்ளது. 

அமெரிக்கா-இந்தியா வர்த்தக கவுன்சில் நடத்திய இந்தியா தொடர்பான மாநாட்டில், அமெரிக்க மத்திய தொலைத்தொடர்பு ஆணைய தலைவரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான அஜித் பை ((Ajit Pai)) பங்கேற்றுப் பேசினார்.

2022ஆம் ஆண்டுக்குள் இந்தியா முழுமையும் எல்லா பகுதிகளிலும் தங்குதடையின்றி அனைவரும் இணையத்தை அணுகச் செய்ய வேண்டும் என்ற இலக்கை பிரதமர் மோடியும் இந்திய அரசும் நிர்ணயித்திருப்பதாகக் குறிப்பிட்டார். 

இந்த இலக்குகளை எட்ட, ஊரகப் பகுதிகளில் 2 மில்லியன் வை-ஃபை ஹாட்ஸ்பாட்டுகளை நிறுவுதல், ஊரகப் பகுதிகளில் தொலைத்தொடர்பு இணைப்புகளை மேம்படுத்துவதற்கான பொது நிதியத்தை விரிவுபடுத்துதல் என துணிச்சலான நடவடிக்கைகளை மோடி அரசு எடுத்து வருவதாக அவர் பாராட்டு தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments