வீட்டின் படுக்கையறையில் இருந்த AC இயந்திரத்தினுள் புகுந்த பாம்பு..!

0 866

புதுச்சேரியில், வீட்டிலிருந்த ஏசி இயந்திரத்திற்குள் பாம்பு தங்கியிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி, தேங்காய்திட்டு பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை. இவர், தனது வீட்டின் படுக்கை அறையில் உள்ள ஏ.சி.யை போட்டுள்ளார். அப்போது, ஏ.சி. இயந்திரத்தில் இருந்து வழக்கத்துக்கு மாறாக சத்தம் வந்துள்ளது.

மெக்கானிக்கை அழைத்து, ஏ.சி. இயந்திரத்தை கழட்டி பார்த்தபோது, அதற்குள் பாம்பு சட்டை இருந்தது. ஏ.சி.யின் அடிப் பகுதியில் டார்ச் லைட் அடித்து பார்த்தபோது உள்ளே பாம்பு இருந்தது தெரியவந்தது.

தகவலறிந்து வந்த வனத்துறை ஊழியர்கள் ஏ.சி. இயந்திரத்துக்குள் இருந்த பாம்பை சுமார் ஒரு மணி நேரம் போராடி பிடித்தனர்.

பிடிபட்ட பாம்பு வனப் பகுதியில் விடப்பட்டது. ஏ.சி.யின் வெளிப்புற அவுட்டோர் யூனிட்டில் இருந்து வரும் பைப் லைனை சரியாக அடைக்காமல் இருந்ததால், அதன் வழியாக பாம்பு ஏ.சி. இயந்திரத்துக்குள் புகுந்திருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

ஏ.சி.இந்திரத்தின் துளைக்கு அருகிலேயே மரம் இருந்ததால் எளிதாக பாம்பு புகுந்திருக்கலாம் என்றும், இதனால் பாம்பு வெளியில் சென்று இரையெடுத்து பின்னர் மீண்டும் எந்திரத்துக்குள் வந்து தங்கியுள்ளதாகவும், குறைந்தது 3 மாத காலமாக ஏழுமலை வீட்டில் பாம்பு இருந்திருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT