தேசிய கீதத்துக்கு இடையே வந்தே மாதரம் பாடல்

0 478

இந்தூரில் மாநகராட்சி சார்பில் நடந்த கூட்டத்தில் மேயர் உள்ளிட்ட பாஜக பிரதிநிதிகள் சிலர், தேசிய கீதத்துக்கு இடையே வந்தே மாதரத்தை பாடும் வீடிய வைரலாகி வருகிறது.

இந்தூர் மாநகராட்சியில், அண்மையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றது. இதில் மேயர் மாலினி கவுர் உள்ளிட்ட பாஜக பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்த நிலையில், தேசிய கீதம் பாடப்பட்டது. அப்போது அங்கிருந்த பிரிதிநிதிகள் தேசிய கீதத்தை பாடுவதை நிறுத்திவிட்டு, திடீரென வந்தே மாதரம் பாடலை பாடினர்.

இந்த காட்சி வலைதளங்களில் பரவி, பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், பிரதிநிதிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி இந்தூர் மாநகராட்சியின் எதிர்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் வாய்தவறி தேசிய கீதத்துக்கு இடையே வந்தே மாதரம் பாடப்பட்டதாக விளக்கமளித்துள்ள இந்தூர் மாநகராட்சி தலைவர் அஜய் சிங் நருக்கா, இதனை எதிர்கட்சிகள் பெரிதாக்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments